search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேசிய நெடுஞ்சாலை துண்டிப்பு"

    கேரளாவில் பெய்து வரும் கனமழையில் தேசிய நெடுஞ்சாலை எண் 183 துண்டிக்கப்பட்டதால் போக்குவரத்து பாதிப்பு அடைந்துள்ளது. #KeralaRain #Keralaflood #NH183
    திருவனந்தபுரம்:

    கேரளா மாநிலத்தின் கொல்லம் பகுதியில் இருந்து திண்டுக்கல் நோக்கி செல்வது தேசிய நெடுஞ்சாலை  எண் 183. இது கேரளாவின் மிக முக்கியமான தேசிய நெடுஞ்சாலை ஆகும்.

    கடந்த இரு வாரங்களுக்கு மேலாக தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளா மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது.

    கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவால் 340க்கு மேற்பட்டோர் பலியாகி உள்ளனர் என முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், கேரளாவில் பெய்து வரும் கனமழையால் முக்கிய தேசிய நெடுஞ்சாலை எண் 183 துண்டிக்கப்பட்டுள்ளது.

    இந்த நெடுஞ்சாலை துண்டிக்கப்பட்டு உள்ளதால் கோட்டயம், சபரிமலை, குமுளி மற்றும் இடுக்கி மாவட்டங்களுக்கு வாகனங்கள் செல்ல முடியாமல் கடும் அவதிப்பட்டு வருகின்றன. இதனால் அந்த பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு அடைந்துள்ளன. மேலும், கேரளாவுக்கு செல்ல வேண்டிய நிவாரண பொருள்களை எடுத்துச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து, தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #KeralaRain #Keralaflood #NH183
    ×